பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் ஆடவர்களை சிறையில் தள்ளு வதற்குப் பதிலாக அவர்களின் உயிரையே பறிக்கும் வகையில் மத்திய பிரதேச அரசாங்கம் சட்டம் கொண்டு வர இருக்கிறது. இந்தியாவிலேயே பெண் களுக்குப் பாதுகாப்பற்ற மாநில மாக மத்திய பிரதேசம் தொடரும் வேளையில் அவர்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதில் மாநில அரசாங்கம் மிகுந்த கவ னம் செலுத்தி வருகிறது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களின் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்ட மசோதா அடுத்த சட்டமன்றக் கூட்டத்தின்போது கொண்டுவரப் படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சௌகான் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த மசோதா மத்திய அரசுக்கும் அதிபருக்கும் ஒப்புத லுக்காக அனுப்பப்படும் என்று போலிஸ் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு பேசும்போது அவர் கூறினார். பெண்களை பாலியல் வதை செய்யும் இளையர்களுக்கு காவல் துறை தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!