போலிஸ் மத்தியப் பிரிவு, குற்றவியல் புலனாய்வுத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் மேற் கொண்ட அதிரடி நடவடிக்கை களில் வேலை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 11 பெண்கள் கைதாகி உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் சாம் லியோங் ரோடு, மிடில் ரோடு ஆகியவற்றில் உள்ள நான்கு பொழுதுபோக்குக் கூடங் களிலும் விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள 'சைம்ஸ்'லும் அதிரடி தேடுதல் வேட்டை மேற்கொள்ளப் பட்டது. வேலை தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் குறிவைத்து இந்தத் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், அவ்விரு கூடங்களும் தங்களது பொழுதுபோக்கு உரிம விதிமுறைகளை மீறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 'சைம்ஸ்' கூடத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.
சாம் லியோங் ரோடு, மிடில் ரோடு ஆகியவற்றில் உள்ள நான்கு பொழுதுபோக்குக் கூடங்களில் 11 பெண்கள் வேலை தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்