அசுன்சியோன்: பராகுவேயில் திருத்தம் செய்யப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஆதர வாக அந்நாட்டு செனட் சபை ரகசியமாக வாக்களித்ததை எதிர்த்து பராகுவே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்திற்கே தீ வைத்தனர். திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டம் அந்நாட்டு அதிபர் ஹொராசியோ கார்ட்டிஸ் தேர்தலில் மீண்டும் போட்டியிட அனுமதிக்கிறது. நாடாளுமன்றத் திற்குள் இரவில் பெருந்திரளாக உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், அங்கிருந்த தளவாடங் களை சேதப்படுத்தினர்.
கட்டடத்தின் கண்ணாடி சன்னல்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி தூள் கிளப்பிக் கொண்டிருந்தபோது கலகத் தடுப்புக் போலிசார் புகுந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் கள் மூண்டன. இதில் ஆர்ப் பாட்டக்காரர்கள் பலர் படுகாய மடைந்தனர். போலிஸ் வாகனங் களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். தொடர்ந்து பராகுவேயின் பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
பராகுவேயில் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைகின்றனர். படம்: ஏஎஃப்பி