இந்தோனீசிய புகாரை சிங்கப்பூர் மறுத்தது

குற்றவாளிகளைத் திருப்பி அனுப்புவது மற்றும் பரஸ்பர சட்ட உதவி கேட்டு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் பேரில் ஒத் துழைக்க சிங்கப்பூர் மறுத்து விட்டதாக இரண்டு இந்தோனீசிய போலிஸ் அதிகாரிகள் தெரிவித் திருக்கும் குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் நேற்று மறுத்தது. சிங்கப்பூரும் இந்தோனீசியா வும் சட்ட அமலாக்கத்திலும் குற்ற வியல் விவகாரங்களைக் கையாள் வதிலும் இருதரப்பு ஒத்துழைப் பைக் கொண்டிருப்பதாக வெளி யுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஒத்த கருத்துகளைக்கொண்ட ஆசியான் உறுப்பு நாடுகளுக் கிடையே பரஸ்பர சட்ட உதவி உடன்பாட்டில் இந்த இரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன என்றும் அவர் விளக்கினார். இந்த ஒத்துழைப்பு, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்கள், அனைத் துலக கடப்பாடுகளையொட்டி ஏற்கெனவே அமலில் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!