ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்
பாடகர் மற்றும் பாடலாசிரியரான 25 வயது ஷாக்தியா சுப்பிரமணி யம், மக்களின் மனதைக் கவரும் பாடல்களுடன் மேடை நிகழ்ச்சி களையும் படைத்து வருகிறார். தனியாக அல்லது 'ஷாக் அண்ட் தி பேட்ஸ்' எனும் தமது இசைக் குழுவுடன் சேர்ந்து இசை விருந்து படைக்கும் அவர், தற்போது தேசியக் கலைகள் மன்றம் நடத்தும் 'நொய்ஸ் சிங்கப்பூர்' என்னும் திட்டத்தில் இசை பயின்று வருகிறார். இவர் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வானூர்தி பொறியியல் துறையில் படித்தவர். பூகிஸில் இருக்கும் 'ப்ளூ ஜாஸ்' என்கிற கஃபேக்கு அடிக்கடி செல்லும் அவர் அங்கு படைக்கப்படும் நேரடி ஜாஸ் இசையை விரும்பிக் கேட்பார். தேசிய சேவைக் காலத்தில், ஓய்வு நேரத்தில் ஒரு முறை ஷாக்தியா பாடிய பாடலைக் கேட்ட அவரது நண்பர்கள் அசந்து போனதுடன் ஷாக்தியாவின் இசைத் திறனை வளர்த்துக்கொள்ளவும் வெளிக் கொணரவும் பெரிதும் ஊக்கம் அளித்தனர்.
பாடுவது மட்டுமின்றி, சொந்தமாக பாடல் வரிகளை எழுதி கித்தாரில் இசையும் அமைக்கிறார் ஷாக்தியா சுப்பிரமணியம். படம்: எஸ்டி செஷன்ஸ்