தமிழ் வார்த்தைகள் முட்டி மோதிய ‘யுத்தம்’

அஷ்வினி செல்வராஜ்

இளையர்களுக்காக இளையர்கள் ஏற்பாடு செய்திருந்த சொல்வள மேம்பாட்டுப் போட்டியான 'யுத்தம்' வார்த்தைப் போராக அரங்கேறியது. தேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் நடை பெற்ற இப்போட்டி, இந்த ஆண்டின் தமிழ்மொழி மாதத்தில் இளையர்களுக்காக நடைபெற்ற முதல் நிகழ்ச்சியாக அமைந்தது. எழுத்து, பேச்சுத்தமிழில் மாண வர்களுக்குள்ள திறனை வெளிப்படுத்த நல்லதோர் தளமாக நிகழ்ச்சி அமைந்ததோடு, மாணவர் களிடையே அன்றாடப் பயன்பாட் டில் இருக்கும் சொற்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதைப் பற்றி அவர் கள் கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது. சென்ற ஆண்டு முதன்முறை யாக மேல்நிலை மாணவர்களுக் காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, இவ்வாண்டு உயர் நிலைப் பள்ளிகளும் பங்கேற்கும் வண்ணம் விரிவுபடுத்தப்பட்டது. உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நேற்று முன்தினம் இப்போட்டியின் அரையிறுதி, இறுதிச் சுற்றுகள் நடைபெற்றன.

விறுவிறுப்பான விளையாட்டின் முடிவுகள் என்னாகுமோ என்ற தவிப்பில் சீடார் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பாலமுருகன் தீபிகா, பாலசுப்பிரமணியன் சஹானா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!