ஜம்மு: காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் செனானி =நஷ்ரி இடையே மலையைக் குடைந்து 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு=ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சுரங்கப் பாதையில் காற்றேட்டம், தீத் தடுப்பு, தகவல் தெடர்பு மற்றும் மின்சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ளது.
புதிய சுரங்கச் சாலையில் பயணம் செய்த பிரதமர் மோடி. படம்: ஊடகம்