புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 90,000 ஆயிரம் மதுக்கடைகள் மூடப் பட்டிருப்பதாகத் தெரிய வந்து உள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி சமூக நீதிக்கான வழக் கறிஞர் பேரவையின் தலைவர் கே.பாலு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள டாஸ் மாக் கடைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட் டது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றமும் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தியா முழுவதும் மதுக்கடைகளை மூடவைத்த வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் கே.பாலு கூறுகையில், "நீதி மன்றத்தின் உத்தரவை சரி யாக கடைபிடிக்கிறார்களா, மதுக் கடைகளை மூடுகிறார் களா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதில் தவறுகள் இருப்பின் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.