போலிஸ் அதிகாரிகள் கடமை தவறினால் ரூ.5,000 அபராதம்

புதுடெல்லி: இந்தியாவில் தங்கள் கடமையை சரிவர நிறைவேற்றத் தவறும் போலிஸ்காரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 250 அல்லது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது. இந்தியாவின் போலிஸ் ஆய்வு, உருவாக்க இலாகா, போலிஸ் துறையில் நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்தவும் ஒளிவுமறைவு இல் லாத போக்கை பலப்படுத்தவும் கட மைத் தவறும் சம்பவங்களுக்கு அதி காரிகளே பொறுப்பேற்பதை உறுதிப் படுத்தவும் பல பரிந்துரைகளை முன்வைத்து இருக்கிறது.

அதன்படி போலிஸ்காரர்கள் 20 நாட்களுக்குள் பாஸ்போர்ட் சரிபார்ப்பு நடவடிக்கைகளை முடிக்கவில்லை என்றால், ஒரு புகார் பதியப்படும்போது அதே நாளில் அந்தப் புகார் பற்றிய முதல் தகவல் அறிக்கை நகலை கொடுக்கவில்லை என்றால், போலிஸ் அதிகாரிகள் முடக்கி வைத்திருக்கும் ஒரு வாகனத்தை மூன்று நாட்களுக் குள் விடுவிக்கவில்லை என்றால் கடமை தவறும் ஒவ்வொரு நாளுக்கும் அவர்களுக்கு ரூ. 250 அபராதம் விதிக்க அல்லது ரூ. 5,000 அபராதம் விதிக்க வேண்டும் என்று அந்த இலாகாவின் பரிந்துரைகள் குறிப்பிடு கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!