மேன்யூவிற்கு பின்னடைவு

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடித்துவிடலாம் என்ற மான் செஸ்டர் யுனைடெட்டின் கனவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று வெஸ்ட் பிரோம்விச் குழுவுடனான போட்டியை கோல்கள் எதுவுமின்றி சமநிலை யில் முடித்ததால் ஏமாற்றமடைந்தது மேன்யூ. யுனைடெட்டின் தாக்குதல் ஆட்டக்காரர் மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட்டின் கோல் போடும் இரண்டு முயற்சிகளையும் வெஸ்ட் பிரோமின் கோல் காப்பாளர் பென் ஃபோஸ்டர் தடுத்துவிட்டார். வெஸ்ட் பிரோமின் ஆட்டக் காரர்கள் பலரும் தற்காப்பில் கவனம் செலுத்தினர். இதனால், ஆண்டனி மார்சியல், ஹென்ரிக் மிகத்திரயன், ஜெசி லிங்கர்ட் ஆகியோரின் கோல் போடும் முயற்சிகளும் பலனளிக்க வில்லை. இதற்கிடையே, பிரோம்விச்சின் டேரன் பிளெட்சர் உதைத்த பந்தை கோலாக விடாமல் தடுத்துவிட்டார் மேன்யூ கோல் காப்பாளர் டேவிட் டி கியா. இந்நிலையில், கடைசி அரை மணி நேரத்திற்கு ஆட்டத்தை சமநிலையில் முடிக்கும் வகையில் விளையாடியது மேன்யூ.

மேன்யூ, வெஸ்ட் பிரோம்விச் குழுக்கள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!