டென்னிஸ் பட்டம் வென்ற முதல் இங்கிலாந்து பெண்

மயாமி: மயாமி பொதுவிருது அனைத்துலக டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகன்னா கோன்டா. இறுதிப் போட்டியில் 12ம் நிலை வீராங்கனையான டென் மார்க்கின் வோஸ்னாக்கியை 10ம் நிலை வீராங்கனை ஜோகன்னா கோன்டா சந்தித்தார். அப்போது 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வோஸ்னாக் கியை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஜோகன்னா. இதன் மூலம் 40 ஆண்டு களுக்குப் பிறகு, டென்னிஸ் பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். மேலும் 25 வயதான கோன்டா உலக தரவரிசையில் 7வது இடத்திற்கும் முன்னேறி உள்ளார். கடந்த 1977ஆம் ஆண்டு இங்கிலாந்து வீராங்னை வெர்ஜினா வேட் 'விம்பிள்டன்' பட்டத்தைக் கைப்பற்றியிருந்தார்.

மயாமி பொதுவிருது வெற்றிக் கிண்ணத்தோடு இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா கோன்டா. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!