'விஐபி-2' படத்தின் கடைசி நாளன்று படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற ரஜினிகாந்த், தனுஷ், சவுந்தர்யா ரஜினிக்கு தன் வாழ்த் துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 2014இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது 'வேலையில்லா பட்டதாரி'. இதை யடுத்து அதன் இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா இயக்கியுள் ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகி றது. தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்துள் ளார். இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிந்தது. இதையறிந்த ரஜினி, திடீரென படப்பிடிப்பைக் காண வந்துள்ளார். அப்போது எடுக்கப் பட்ட பாடல் காட்சி ஒன்றை நேரில் கண்டு ரசித்த அவர், பின்னர் படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நடிகர் தனுஷ், சவுந்தர்யா இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
'விஜபி-2' படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் தனுஷ், ரஜினி, இயக்குநர் சவுந்தர்யா