மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று திடீரென்று கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டார். கடந்த 2009ஆம் ஆண்டு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு களுக்கு ஆதரவாக பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதே ஆண்டு செப்டம்பர் 15ல் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய வைகோ, "தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர னுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்," என்று ஆவேசமாகப் பேசினார்.
புகாரின் அடிப்படையில், அப் போதைய திமுக ஆட்சி வைகோ மீது சீர்குலைவு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது. பின்னர் அவர் பிணை யில் விடுவிக்கப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக இவ் வழக்கு நடந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார் வைகோ. ஆனாலும் வழக்கு நிலுவையிலேயே இருந் தது. அதனால், நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் தாமாக முன் வந்து மனு ஒன்றை தாக்கல் செய்தார் வைகோ. வழக்கை விரைவாக நடத்தவில்லையெனில் தம்மை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்த வைகோ. எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் வைகோ சரண டைந்தார். பிணையில் செல்ல விருப்ப மில்லை என நீதிபதியிடம் வைகோ தெரிவித்ததால் அவரைக் கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து புழல் சிறையில் வைகோ அடைக் கப்பட்டார். அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.