தனியார் வீட்டு விலைகள் 0.5% சரிவு

இவ்வாண்டு முதல் காலாண்டில் இதற்கு முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் தனியார் குடியிருப்பு சொத்துகளின் விலைகள் 0.5 விழுக்காடு மெதுவடைந்தது. நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளி விவரங்கள் இதனை காட்டுகின்றன. கடந்த 14 காலாண்டுகளாக தனியார் வீட்டு விலைகள் சரிந்து வந்த நிலையில் குடியிருப்பு சொத்துச்சந்தை மெதுவடைந்துள்ளதை தற்போதைய சரிவு காட்டுவதாக சொத்து நிபுணர்கள் தெரிவித்தனர். 2016ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1.5 விழுக்காடாக சரிவு கண்ட சொத்துச்சந்தை கடந்த இரண்டு காலாண்டில் 0.5 விழுக் காட்டுக்கு மெதுவடைந்தது. ஆனால் சவால்மிக்க பொருளியல், அதிகரிக்கும் வட்டி விகிதம், நிச்சயமற்ற வேலை வாய்ப்பு போன்றவை காரணமாக சொத்துச் சந்தை பழைய நிலைக்குத் திரும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!