வீவக வீட்டிலிருந்து விழுந்த உலோகக் கம்பிகள்

வீவக வீட்டிலிருந்து இரண்டு உலோகக் கம்பிகள் உடைந்து விழுந்தன. ஆனால் இந்த அசம்பாவிதத்தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை என்று லியான்ஹ வான் பாவ் நாளிதழ் வெளியிட்ட செய்தி தெரிவித்தது. சனிக்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு இண்டஸ் ரோடு புளோக் 77ல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும் உலோகக் கம்பிகள் மூன்று மீட்டர் நீளம் இருந்ததாகவும் சீன நாளிதழ் குறிப்பிட்டது. ஒரு உலோகக் கம்பி கூரை மீது விழுந்தது.

மற்றொரு கம்பி நடைபாதையில் விழுந்தது. வான்பாவ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டெல்டா ரோட்டுக்கு அருகே வசிக்கும் தந்தையின் வீட்டுக்குச் சென்ற போது கனமான பொருள் விழுந்த தைப் போன்று பெரும் சத்தம் கேட்டதாக செல்வி லிம், 40, தெரிவித்திருந்தார். புளோக்குகளில் அலங்காரத்துக்காக அந்த உலோகக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன என்றும் அவர் சொன்னார். இந்தச் சம்பவத்தினால் 77, 78, 79 ஆகிய மூன்று புளோக்கு ளைச் சுற்றி உடனடியாக பாதுகாப்புத் தடுப்புகள் போடப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!