பேரங்காடிகளிலும் சில்லறைக் கடைகளிலும் கைவித்தைகளைக் காட்டி ஏமாற்றிய குறைந்தது 12 திருட்டு சம்பவங்களில் மூன்று ருமேனியர்களை போலிசார் கைது செய்துள்ளனர். மூவரில் ஒருவர் பெண். ஐந்து நாட்களுக்கு முன்பு சந்தேகப் பேர்வழிகள் சிங்கப்பூரில் நுழைந்த விவரம் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த மாதம் 31ஆம் தேதி ரொக்கம் குறைவதாக பேரங்காடி ஒன்றிலிருந்து காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து காவல்துறை யினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் 25 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேக நபர்கள் காசாளரிடம் சில்லறைக் கேட்டதாக நம்பப்படுகிறது. இந்த வேண்டுகோளை ஏற்ற இரண்டு காசாளர்கள் சில்லறையை மாற்றித் தரும்போது மூன்று சந்தேக சந்தேகப்பேர்வழிகள் கைவித்தைகள் மூலம் ஏமாற்றிய விவரம் விசார ணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அடுத்ததாக ஏப்ரல் 1,2 தேதிகளில் இதே போன்ற சம்பவங் களில் ரொக்கம் குறைவதாக தீவு முழுவதும் உள்ள பல்வேறு பேரங் காடிகளிலிருந்தும் சில்லறைக் கடைகளிலிருந்தும் போலிசாருக்கு புகார்கள் வந்தன.
சந்தேகப் பேர்வழிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிங்கப்பூர் வெள்ளி, வெளிநாட்டுப் பணம். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை