இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு விசா கட்டண உயர்வு

கோலாலம்பூர்: இந்தியா செல்லும் மலேசிய சுற்றுலாப் பயணி களுக்கு விசா கட்டணம் இந்த மாதம் முதல் 150 விழுக்காடு உயர்த்தப்பட்டிருப்பது குறித்து மலேசிய சுகாதார அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித் துள்ளார். இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரியிடம் பேச்சு நடத்தி யிருப்பதாகவும் புதுடெல்லியிலிருந்து தான் மலேசியா திரும்பியவுடன் விசா கட்டண உயர்வு குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார். மலேசியா வரும் இந்தியர்கள் மலேசியாவில் 15 நாட்கள் தங்குவதற்கு விசா கட்டணம் செலுத்த வேண்டி யதில்லை. இந்நிலையில் இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது நியாய மற்றது என்று திரு சுப்பிரமணியம் கூறினார். இந்தியா செல்லும் மலேசி யர்களுக்கான விசா கட்டணம் முன்பு 188 ரிங்கிட் வசூலிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து 456 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பதாக இந்தியத் தூதரகம் அறிவித்திருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!