‘வடகொரியாவை அமெரிக்கா தனித்து நின்று சமாளிக்கும்’

வா‌ஷிங்டன்: சீனாவின் உதவி இருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும் வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை அமெரிக்கா தனித்து நின்று சமாளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். சீன அதிபர் சி ஜின்பிங் இந்த வாரம் வா‌ஷிங்டன் வருவதற்கு முன்னதாக திரு டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த திரு டிரம்ப், "வடகொரியப் பிரச்சினைக்குத் தீர்வு காண சீனா உதவவில்லை என்றால் அமெரிக்கா தனித்து நின்று அப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்," என்று கூறினார். அமெரிக்காவால் தனியாக வெற்றி பெற முடியுமா என்று அழுத்தமாக கேட்டதற்கு "முழுமையாக" என அவர் பதிலளித்தார்.

"வட கொரியா மீது சீனா மிகப்பெரிய தாக்கத்தைக் கொண் டுள்ளது. வட கொரியா தொடர்பாக எங்களுக்கு உதவ சீனா முடிவு எடுக்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறு உதவினால் அது சீனாவிற்குப் பலனை அளிக் கும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அது யாருக்கும் பலனளிக்காது" என திரு டிரம்ப் தெரிவித்தார். வட கொரியா மற்றும் அமெரிக்கா நேருக்கு நேர் மோதுமா என்று கேட்டதற்கு இதற்குமேல் தான் எதுவும் கூற வேண்டியதில்லை என்றும் வடகொரியாவை அமெரிக்கா தனித்து எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!