'அம்மணி', 'இறுதிச் சுற்று' போன்ற பட வரிசையில் பெண்க ளின் பெருமையைப் பேசும் படமாக தயாராகி உள்ளது 'இலை'. இதை இயக்குபவர் பினிஷ் ராஜ். சுவாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர்நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள் ளார். கன்னட நடிகர் கிங்மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி என மொழிக்கு ஒரு நட்சத்திரம் நடித்துள்ளார்களாம். ஆரல்வாய்மொழி, சாலக்குடி, திண்டுக்கல், தேனி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
சந்தோஷ் அஞ்சல் ஒளிப் பதிவு செய்கிறார். "வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் போராட்டம்தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை. இது 1991ல் நடக் கும் கதையாக உருவாக்கி இருக் கிறோம். பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கக்கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது. அந்த ஊரில் வசிக்கும் படத்தின் நாயகிக்கோ படித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பது கனவு.
'இலை' படத்தில் சுவாதி நாராயணன்.