எதிர்த்த ரசிகர்களுக்குப் பாராட்டு

லண்டன்: ஆர்சனல் ரசிகர்களில் பெருவாரியானோர் அக்குழுவின் நிர்வாகிப் பதவியிலிருந்து தம்மை விலகச் சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் அவர்களைப் பாராட்டி இருக்கிறார் ஆர்சன் வெங்கர். சொந்த எமிரேட்ஸ் அரங்கில் நேற்று முன்தினம் இரவு மான் செஸ்டர் சிட்டி குழுவிற்கு எதிராக நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆர்சனல் 2-2 எனச் சமன் கண்டது. ஆட்டம் தொடங்கி ஐந்தாவது நிமிடத்திலேயே கோலடித்து ஆர் சனல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ளாக்கினார் சிட்டி ஆட்டக்காரர் லொஹுவா சனே. பதிலுக்கு முற்பாதி ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்த நிலையில் கோலடித்து சிட்டியின் முன்னி லையை ஈடுகட்டினார் ஆர்சனல் குழுவின் தியோ வால்காட். ஆனாலும் இழந்த முன்னி லையை அடுத்த இரு நிமிடங் களிலேயே திரும்பப் பெற்றது சிட்டி. இம்முறை கோலடித்தவர் சிட்டியின் நட்சத்திர ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ.

ஆர்சனல் தற்காப்பு ஆட்டக்காரர் ஹெக்டர் பெல்லரின் (இடது), கோல்காப்பாளர் டேவிட் ஒஸ்பினா ஆகியோரின் தடுப்புகளை முறியடித்து ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே கோலடித்து மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு முன்னிலை பெற்றுத் தந்த லொஹுவா சனே. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!