தற்காப்பு அமைச்சின் 'ஐ-நெட்' எனும் தகவல் தொழில்நுட்பத் தளம் ஊடுருவப்பட்ட சம்பவம், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அது கண்டுபிடிக்கப் படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே ஊடுருவல் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்றார் இரண் டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங். இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி தற்காப்பு அமைச்சால் வெளி யிடப்பட்ட இணையத்தள ஊடு ருவல் சம்பவத்தால் தேசிய சேவை யாளர்கள் உட்பட தற்காப்பு அமைச்சிலும் ராணுவ முகாம் களிலும் பணியாற்றி வரும் சுமார் 850 நபர்களின் தனிப்பட்ட தக வல்கள் திருடப்பட்டது குறித்து திரு ஓங் நாடாளுமன்றத்தில் பேசினார். இணையத் திருட்டுகளுக்கான ஆபத்துகளைக் குறைக்கும் நோக் கில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களைத் தனது இணையத் தளத்தில் சேகரிப்பது குறித்து தற்காப்பு அமைச்சு மறுஆய்வு செய்கிறது என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.
தற்காப்பு அமைச்சு பிப்ரவரியில் இணைய ஊடுருவல் பாவனை பயிற்சியை நடத்தியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்