சுங்கை ரோடு பழைய பொருட்கள் சந்தையில் கடை நடத்தி வரும் 11 ஆரம்பகால கடைக்காரர்களில் ஐந்து பேர், கோல்டன் மைல் உணவங்காடியிலும் சைனா டவுன் சந்தையிலும் கடைகள் வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜூலை 10ஆம் தேதி சுங்கை ரோடு மூடப்பட்டதும், எல்லா 11 கடைக்காரர்களுக்கும் நகர் பகுதி யில் தேர்வு செய்யப்பட்ட உணவங் காடிகளில் மானியக் கட்டணத்தில் வாடகைக் கடைகள் நடத்தும் தேர்வு வழங்கப்பட்டது என்று சுற் றுப்புற, நீர்வள அமைச்சர் மச கோஸ் ஜுல்கிஃப்லி நாடாளுமன் றத்தில் கூறினார். நல்லெண்ணத்தின் அடிப்படை யில் முதல் ஆண்டு கடைக்காரர்க ளுக்கு வாடகை தள்ளுபடி செய்யப் படும். இரண்டாவது ஆண்டில் அவர்களுக்கு 50% வாடகைக் கழிவு வழங்கப்படும் என்றார் அவர்.
ஜூலை 10ஆம் தேதியன்று சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுங்கை ரோடு சந்தை மூடப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்