‘நெடும்பா’

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'வெங்காயம்'. இதில் கௌரவ வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இப்படத்துக்குப் பலரும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் சங்ககிரி ராஜ் குமார் தன்னுடைய அடுத்த படத்திற்கு 'நெடும்பா' எனத் தலைப்பிட்டுள்ளார். முழுப் படப்பிடிப்பும் முடிந்து விட்டாலும் இப்படத்தின் வெளியீடு மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இது குறித்து தனது துயரம், மனவேதனையைத் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சங்க கிரி ராஜ்குமார்.

"இந்த 'நெடும்பா' திரைப் படத்தின் படப்பிடிப்பு, முழு பணிகளும் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது. அப்படி வெளியிட்டாலும் எந்தப் பலனும் இருக்காது. "இந்நிலையில் படம் பார்த்த இயக்குநர் சேரன், இப்படம் 'வெங்காயம்' திரைப்படத்தை விடப் பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து இதை தானே வெளியிடுகிறேன் எனச் சொல்லி ஒப்பபந்தம் செய்தார். சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்தபோது உயர் மதிப்பு ரூபாய் நோட்டு பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளால் தொடர்ச்சியாக பட வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந் தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!