ஜப்பான், சீனா உறவு மேம்பட இரு மூத்த அதிகாரிகள் பேச்சு

தோக்கியோ: சீன வெளியுறவு துணை அமைச்சர் கோங் ஸுவான்யும் ஜப்பானிய வெளியுறவு துணை அமைச்சர் அகிபாவும் தோக்கியோவில் செவ்வாய்க் கிழமை சந்தித்துப் பேசினர். இவர்களின் சந்திப்பு ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேயும் சீன அதிபர் சி ஜின்பிங்கும் வரும் ஜூலை மாதம் சந்தித்துப் பேசு வதற்கு வழிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோக்கியோவில் நடந்த சந்திப்பின்போது வடகொரியாவின் அணுவாயுத மிரட்டலைத் தடுக்க இரு நாடுகளும் எந்த வகையில் ஒத்துழைக்கலாம் என்பது குறித்து பேச்சு நடத்தினர். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நிலையான உறவு ஏற்பட அவ்விரு நாடுகளுக்கு இடையே அணுக்க தொடர்பு தேவை என்று திரு கோங்கும் திரு அகிபாவும் அப்போது வலியுறுத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!