மாஸ்கோ: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மெட்ரோ சுரங்க ரயிலில் செவ்வாய்க்கிழமை குண்டு வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அந்த குண்டு வெடிப்புக்குக் காரணமான சந்தேக நபர் கிர்கிஸ்தானைச் சேர்ந்த ரஷ்ய குடியுரிமை பெற்றவர் என்றும் அந்த சந்தேக நபர் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி என்றும் கிர்கிஸ்தான் பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் கூறியதாக இன்டர்ஃபெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள தாகவும் ஆனால் அவரது பெயரையும் மற்ற விவரங்களையும் தெரிவிக்க கிர்கிஸ்தான் பாதுகாப்பு சேவைப் பிரிவின் பேச்சாளர் மறுத்துவிட்டதாகவும் டாஸ் செய்தி நிறுவனத் தகவல் கூறுகிறது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மெட்ரோ ரயில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புட்டின் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். படம்: ஏஎஃப்பி