பெய்ருட்: சிரியாவில் அர சாங்கத்திற்கு எதிராக செயல்படும் கிளர்ச்சி யாளர்களைக் குறி வைத்து சிரியா விமானப் படை நடத்திய தாக்கு தலில் 11 சிறுவர்கள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் உயிரிழந்ததாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கான் ஷேகுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடத் தப்பட்ட தாக்குதல் நச்சு வாயுத் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நச்சுவாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் சுவாசப் பிரச்சினை இருந்தது. படம்: ஏஎஃப்பி