சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் சசிகலா நடராஜனுக்கு ஆதரவாக உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 98 பேர் ஓ.பன் னீர்செல்வம் அணிக்குத் தாவ தயாராக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க பெரிய சதி நடந்துகொண்டிருப்பதாகவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் கூறினார். "ஒரு கலவரத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி கள் நடைபெறுகின்றன. ஆர்.கே. நகர் தொகுதியில் தினகரன் பணத்தை வாரி இறைத்து வருகிறார். "என்ன நடந்தாலும் தேர்தல் முடிவுக்குப் பின்னர் தமிழகம் மீண்டும் ஒரு கூவத்தூரைச் சந்திக்கும். அப்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் 98 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். ஏன் திமுகவில் உள்ள முன்னாள் அதிமுகவினர் கூட எங்கள் பக் கம் வரக்கூடும்," என்றார் கே.சி.பழனிச்சாமி.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்