பன்னீர்செல்வம்: ஒதுங்கியவர்கள் இணைந்தால் வெற்றி உறுதி

சென்னை: சசிகலா குடும்பத்தால் பாதிக்கப் பட்டு, தற்போது வெவ்வேறு வகையில் ஒதுங்கி இருக்கும் மூத்த நிர்வாகி கள் தங்களுடன் இணைய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு பலர் இணைந்தால், சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்ம யுத்தம் வெற்றி பெறும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கூறினார். "உண்மையான விசுவாசி என ஜெயலலிதாவால் அழைக்கப்பட்ட மதுசூத னனை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் மக்கள் ஆதரவு அலை நமக்குச் சாதகமாக வீசுகிறது. "சசிகலா குடும்பத்திடம் இருந்து, கட்சியையும் ஆட்சியையும் மீட்பது நம் கடமை. இதற்கான வாய்ப்பு ஆர்.கே.நகரில் நமக்கு கிடைத்துள்ளது. இந்த தர்ம யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும்," என்றார் பன்னீர்செல்வம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!