வில்சன் சைலஸ்
போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அதிக எண் ணிக்கையில் மாணவர்களும் நிபு ணர்களும் கைது செய்யப்படுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித் துள்ளார். போதைப் பொருள் உட்கொள் வது கேளிக்கையானது, உல்லாச மானது என்ற புதிய தலைமுறை போதைப் புழங்கிகள் நினைத்துக் கொண்டு அவற்றுக்கு அடிமையா கின்றனர் என்று அமைச்சர் எச்ச ரித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் போதைப் புழக்கத்துக்காக 350 மாணவர்களும் கடந்த ஆண்டில் மட்டும் 70 நிபுணர்களும் மேலாளர் களும் சிக்கினர் என்றும் திரு சண்முகம் விவரித்தார். போதைப் பொருள் குற்றங்களுக் காக தொடக்கநிலை முதல் உயர் கல்வி நிலையங்கள் வரை 151 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிக ளும் கடந்த ஆண்டு கைது செய் யப்பட்டனர். 2015ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 124. 2014ல் இது 83 ஆக இருந்தது. மொத் தத்தில் 358 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் கைதாகினர்.