குவோங் வாய் ‌ஷியு மருத்துவமனை விரிவாக்கம் காண்கிறது

சிராங்கூன் ரோட்டிலுள்ள குவாங் வாய் ‌ஷியு மருத்துவ மனை இனிமேல் நிறுவனம் போல் செயல்படும். நவீனமயப் படுத்தவும் தனது சேவைகளை விரிவாக்கவும் அதற்கு சுதந்திரம் கிடைக்கும். இந்த சமூக மருத்துவமனையை நிர்வகிக்கும் நூறாண்டு காலச் சட்டத்தை ரத்து செய்ய நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மருத்துவமனை சிங்கப்பூரின் ஆகப் பெரிய மருத்துவப் பராமரிப்பு இல்லமாகும். மறுநிர்மாணத்தைத் தொடர்ந்து அக்டோபரில் இல்லத்தில் படுக்கை எண் ணிக்கை இரட்டிப்பாகும். குவாங் வாய் ‌ஷியு இலவச மருத்துவமனை சட்டம் குறித்து ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் தலைமையிலான தேர்வுக்குழு அது குறித்து ஆராய்ந்து பிப்ரவரியில் அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!