விவசாயிகள் கடனை ரத்து செய்க: தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாட்டில் பருவமழையும் பொய்த்துவிட்டது. அண்டை மாநிலங்களும் தண்ணீர் தர மறுத்துவிட்டன. நீர்வரத்து எதுவுமே இல்லாமல் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கோடை வெப்பம் கொளுத்துவதால் கால்நடைகள், தாவரங் களுடன் மனிதர்களும் தண்ணீருக்குத் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் சில வார காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இச்சூழலில் விவசாயிகள் வாங்கி இருக்கும் கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதுபற்றி கருத்துக் கூறிய டெல்லி தமிழக விவசாயிகள் போராட்ட பேராளர் அய்யாக்கண்ணு, "தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும்," என்று சூளுரைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!