மத்திய சேமநிதிக் கழகம், செய லாக்கக் கோளாறு காரணமாக 800க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கொடுக்கப்பட்ட மெடிசேவ் மானிய மான சுமார் $1.7 மில்லியன் தொகையைத் திரும்பிப்பெற உள் ளது. சிங்கப்பூரில் 2016 மார்ச் முதல் 2017 ஜனவரி வரை சிங்கப்பூர் குடிமக்களாக ஆன 885 சிறார்கள் தங்களுடைய மெடிசேவ் கணக்கு களில் $1,000 முதல் $3,000 வரைப்பட்ட மானியத்தைப் பெற்ற னர்.
இந்த மானியம் புதிதாகப் பிறந்த பிள்ளைகளுக்கான மருத் துவச் சேமிப்பு மானியமாகும். ஆனால் இந்தப் பிள்ளைகளுக்கு அவர்கள் தகுதிபெறும் மானியத் தைவிட அதிகமான தொகை கொடுக்கப்பட்டுவிட்டது. புதிதாகப் பிறக்கும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள பிள் ளைகள் அனைவருக்கும் $4,000 தொகை மானியமாக அவர்களின் மத்திய சேம நிதி மெடிசேவ் கணக்கில் வரவு வைக்கப்படும்.