ஜப்பான் கடலில் ஏவுகணை செலுத்திய வடகொரியா

வா‌ஷிங்டன்: ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை செலுத் தியதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. மேலும் இதனால் வட அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அது கூறியுள்ளது. சீன அதிபர் சி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆகிய இருவரும் சந்திக்க விருக்கும் நிலையில், வடகொரியா இந்த ஏவுகணையைச் செலுத்தி உள்ளது. இச்சந்திப்பில் வடகொரி யாவின் அணு ஆயுத, ஏவுகணை சோதனைகள் தொடர்பாகவும் அவர்கள் பேச்சு நடத்துவார்கள் என்று தெரிகிறது. வடகொரிய பிரச்சினைக்குத் தீர்வு காண சீனா ஒத்துழைக்க வில்லை என்றால், அமெரிக்கா தனித்து நின்று அதை சமாளிக்கும் என்றும் டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று வட கொரியா செலுத்திய ஏவுகணை கேஎன்-15 ரகத்தைச் சேர்ந்தது என்றும் இது கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா சோதனை செய்த அதே வகையைச் சேர்ந்த தாக இருக்கலாம் என்றும் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!