‘நச்சுவாயு தாக்குதல் கடும் போர்க்குற்றம்’

பெய்ரூட்: சிரியாவில் கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள கான் ஷேகுன் பகுதியின் இட்லிப் மாநிலத்தில் நடத்தப்பட்ட நச்சு வாயுத் தாக்குதல் கடும் போர்க் குற்றம் எனக் கூறியுள்ளார் ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேர்ஸ். இந்த நச்சுவாயுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது. அதில் 20 குழந்தைகளும் அடங்குவர். மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்டுள்ள பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடு கள் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு மன்றத்தை உடனே கூட்டுமாறு கேட்டுக்கொண்டன. இதற்கிடையே, சிரியா விமா னப்படைத் தாக்குதலின்போது சாதாரண குண்டுகளைத்தான் பயன்படுத்தியதாகவும் அப்போது கிளர்ச்சியாளர்கள் பதுக்கி வைத்து இருந்த ரசாயன ஆயதங் கள் வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறது ரஷ்யா.

கிளர்ச்சி யாளர்களுக்கு எதிராக சிரியா அரசாங்கம் நடத்திய விமானப்படை தாக்குதலில் சிதைந்த மருத்துவமனை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!