கட்ஜூ: மக்களைப் பாதிக்காத அறிவியலே இந்தியாவுக்கு தேவை

நியூயார்க்: மக்களையும் விவசாயத்தையும் குடிநீரையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காத அறிவியல்தான் இந்தியாவுக்குத் தேவை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவரை, அங்குள்ள தமிழர்கள் சிலர் சந்தித்தனர். அவர்கள் மத்தியில் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "மத்திய அரசு செயல்படுத்தும் 'ஹைட்ரோ கார்பன்' திட்டம் விவசாயத்தையும் நிலத்தடி நீரையும் பாதிக்கும் என்றால் அத்திட்டம் தமிழகத்துக்கு வேண்டாம். அரசாங்கம் வியாபார நோக்கத்தில் செயல்படக் கூடாது. முதலில் மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்," என்றார் கட்ஜூ. 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை எதிர்த்துப் போராடும் தமிழக மக்களுக்கு சட்டப்படியான உதவிகளைச் செய்யப் போவ தாகக் குறிப்பிட்ட அவர், போராடுபவர்கள் அழைப்பு விடுத்தால் தமிழ்நாட்டுக்கு நேரில் செல்லப் போவதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!