புதுடெல்லி: தமிழ்நாட்டின் தஞ்சா வூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவ சாயிகள் கிட்டத்தட்ட கடந்த மூன்று வாரங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகளின் கோரிக் கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில், அவர்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. கடந்த 24 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங் களைப் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வந்து எட்டிக்கூட பார்க் காமல் இருப்பதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்கவேண்டும், பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 150 விவசாயிகள் கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியாக ரூ.40,000 கோடியை வழங்க வேண்டும் என்றும் தங்க ளின் உற்பத்தி பொருளுக்கு நல்ல விலையை வழங்கவேண்டும் என் றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தமிழக விவ சாயிகள் எதிர் நோக்கும் பிரச் சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் 150 விவசாயிகள் பாதித் தலைமுடி, மீசையை மழித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதவிதமான போராட்டங்களை கடந்த 24 நாட்க ளாகத் தொடர்ந்து இவர்கள் நடத்தி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்