புதிய ஆளுமை நெறிமுறைகள் 2018ல் நடப்புக்கு வரும்

சிங்கப்பூரில் உள்ள நன்கொடை அமைப்புகளுக்கும் பொது நன் மதிப்புக் கழகங்களுக்குமான திருத்தி அமைக்கப்பட்டுள்ள ஆளுமை நெறிமுறைகளை நன் கொடை மன்றம் வெளியிட்டு உள்ளது. அவை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடப்புக்கு வரும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது. புதிய ஆளுமை நெறிமுறை களின் கீழ், தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநர் சபை உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொண்ட நன் கொடை அமைப்புகள் அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும். "நன்கொடை அமைப்புகள் இயக்குநர் சபையில் அடுத்த நிலை உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க திட்டம் வகுக்க ஊக்குவிப்பதே இந்த வழிகாட்டி யின் நோக்கம்," என்று அமைச்சு குறிப்பிட்டது. ஆளுமை நெறிமுறையில் செய்யப்பட்டுள்ள மற்ற மாற்றங்கள் அறிக்கையில் விவரிக்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!