இங்கிலிஷ் பிரிமியர் லீக்: ஸ்பர்சின் கடைசி நேர வெற்றி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சுவான்சியை 1=3 என வீழ்த்தியது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர். இதன் மூலம், செல்சி யுடனான இடைவெளியை ஏழு புள்ளி களாக குறைத்துள்ளது ஸ்பர்ஸ். 11வது நிமிடத்தில் முதல் கோலைப் புகுத்தி முன்னிலை பெற்றது சுவான்சி. அந்தக் கோலை சமன் செய்ய முடியாமல் ஆட்டத்தின் கடைசி நேரம் வரை டோட்டன்ஹம்மை திணற அடித்தது சுவான்சியின் தற்காப்பு ஆட்டம். 88வது நிமிடத்தில் டெலி அலி சுவான்சியின் தற்காப்பு அரணை உடைத்து முதல் கோலைப் புகுத்தும் வரை ஸ்பர்ஸின் வெற்றி கேள்விக் குறியாகவே இருந்தது. அதைத் தொடர்ந்து கூடுதல் நேரத்தின்போது, சன் ஹியூங்=மின், கிறிஸ்டியன் எரிக்சன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கோல்களைப் புகுத்த 3=1 என ஸ்பர்ஸ் குழு வெற்றி பெற்றது. மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழுவை வீழ்த்தியது செல்சி. 10வது நிமிடத்தில் ஈடன் ஹசார்ட் உதைத்த பந்தை, சிட்டியின் கோல் காப்பாளர் வில்லி தடுக்கத் தவறியதால் அது கோலாக மாறியது. அதுபோல் அகுவேரோ உதைத்தப் பந்தைத் தடுக்க செல்சியின் கோல் காப்பாளர் தவறியதால் 26வது நிமிடத்தில் செல்சியின் கோலை சமன் செய்தது சிட்டி குழு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!