ஜெர்மன் படைகளுடன் சிங்கப்பூர் கூட்டுப் பயிற்சி

ஜெர்மன் ஆயுதப் படைகளுடன் உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி கூட்டுப் பயிற்சியில் ஈடுபட சிங்கப்பூர் ராணுவம் தீர் மானித்துள்ளது. இந்தப் பயிற்சியில் சிங்கப்பூரின் முதல் கம்பெனியான 48வது ஆயுதப் படைப் பிரிவும் ஜெர் மனியின் பிரதான பீரங்கிப் படையும் ஈடுபடுகின்றன. ஜெர்மனியில் ஓபர்லாவ்சிட்ஸ் ராணுவப் பயிற்சியில் இந்த கூட்டுப்பயிற்சி நடைபெறுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. இவ்வாண்டு மார்ச் 14ஆம் தேதியிலிருந்து மே 3ஆம் தேதி வரையிலும் செப்டம்பர் 12ஆம் தேதியிலிருந்து நவம்பர் 3ஆம் தேதி வரையிலும் இரு பயிற்சிகள் நடைபெறும். இதில் 48வது படைப் பிரிவு, ஆயுதப் பயிற்சி கழகம் ஆகிய வற்றைச் சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவிருக் கின்றனர். கவச வாகன தாக்குதல் பயற்சியின் ஓர் அங்கமாக உண் மையான துப்பாக்கிக் குண்டு களைப் பயன்படுத்தும் பயிற்சி இடம்பெறுகிறது. இத்தகைய பயிற்சியில் சிங்கப்பூரும் ஜெர் மனியும் 2009ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!