இந்திப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

பாலிவுட் பிரபலம் பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதிரடியும் நகைச்சுவையும் உள்ள இப்படத்தில் அபிமன்யூ ஜோடியாக புதுமுகம் ராதிகா மதன் நடிக்க உள்ளார். வாசன் இயக்கவுள்ள இப்படத்தை அனுராக் காஷ்யப் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளாராம். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு 'மர்த் கோ தர்த் நஹி ஹோத்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கவண்' படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக அவர் நடித்துள்ள 'புரியாத புதிர்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதுதவிர, 'விக்ரம் வேதா', 'கருப்பன்', 'அநீதி கதைகள்', '96' உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்திப் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!