தீபிகா: நிறைய குழந்தைகள் வேண்டும்

இந்தி பட உலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே, நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். "நான் சிவப்பாக மாற சிகிச்சை செய்து கொண்டதாக யாரோ சொல்கிறார்கள். எனக்கே தெரியாமல் அப்படியென்ன சிகிச்சை அது என எனக்குத் தெரியவில்லை. "நான் மாடலிங் செய்து வாங்கிய முதல் சம்பளம் 3 ஆயிரத்து 500 ரூபாய். பெங்களூரில் நடந்த பே‌ஷன் நிகழ்வில் ஒய்யாரமாக நடந்து வந்தேன். அதற்கு வெகுமதியாக அது கிடைத்தது. "நான் பார்த்தவர்களில் மிகவும் பிரபலமானவர் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். அண்மையில் என்னை அழ வைத்த படங்கள், 'லாலா லேண்ட்', 'மான்செஸ்டர் பைத சீ', ஆகியவை," என்று அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ளார். இறப்பதற்கு முன்பு நீங்கள் செய்ய விரும்பும் முக்கியமான காரியம் என்ன? என்று தீபிகாவிடம் கேட்டபோது, "நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன்," என்று கூறி அதிசயப்பட வைத்திருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!