விஷால், கார்த்தி கூட்டணி

விஷாலும் கார்த்தியும் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு திரைப் படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இதன் மூலம் தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இருவரும் தயாராகியுள்ளனர். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி இருவரும் ஒரே அணியில் நின்று வெற்றி பெற்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது, நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டடம் கட்டும் பணிக்காக இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும், அதன் மூலம் திரட்டப்படும் தொகையை நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிக்கு கொடுக்கப் போவதாகவும் அறிவித்தனர்.

வெற்றிக்குப் பிறகு இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே அறிவித்தபடி விஷாலும் கார்த்தியும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநரும், நடிக ருமான பிரபுதேவா இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகி றது. வரும் ஜுன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளனராம். இப்படத்தின் கதாநாயகியாக சாயிஷா ஒப்பந்தமாகி உள்ளதாகத் தெரிகிறது. இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் 'வனமகன்' படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. விஷால், கார்த்தி இருவரும் இணைவது உறுதியாகிவிட்டாலும், இவர்கள் இணைவது நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டத்தானா? என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தக வல்கள் விரைவில் வெளிவரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியத் திரையுலகம் சார்பில் இளைய ராஜாவை கவுரவப் படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத் துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புது நிர்வாகிகள் இளை யராஜாவை அவருடைய அலு வலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து செய்தி யாளர்களிடம் பேசிய விஷால், இளையராஜாவோடு பேசிய முப்பது நிமிடங்கள் வாழ்க்கையில் இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்துள்ளது என்றார். அவருக்கான பாராட்டு விழா பிரமாண்டமாக இருக்கும் என்றார் விஷால்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!