வெற்றிப்படிகளைக் கடந்து வர சிங்கப்பூருக்கு உறுதுணையாக இருந்தன தேச நிறுவனர்களால் முன்வைக்கப்பட்ட நற்பண்புகள். சமத்துவம், நேர்மை, மனிதநேயம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்பு களின் தொகுப்பாக திகழவிருக் கும் தேச நிறுவனர்களுக்கான நினைவிடம், எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. நினைவிடம் தொடர்பாக கரை யோரப் பூந்தோட்டத்தின் 'வாட்டர் வியூ' கூடத்தில் அமைக்கப் பட்டுள்ள கண்காட்சிக்கு வந்து நினைவிடத்தின் அம்சங்கள், அதில் எத்தகைய வசதிகள் இருக்கவேண்டும் போன்றவற்றைப் பொதுமக்கள் பதிவுசெய்யலாம்.
கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெற்று வரும் கண்காட்சியின் ஓர் அங்கம். படம்: திமத்தி டேவிட்