அக்காவுக்கு ஏற்ற நாயகனைத் தேடும் நிக்கி கல்ராணி

'டார்லிங்' படம் மூலம் பிரபலமான நிக்கி கல்ராணி தன்னுடைய சகோதரிக்கு உயரமான வளர்ந்த நாயகனைத் தேடி அலைகிறார். 'டார்லிங்' படத்தில் ஜி.வி.பிரகா‌ஷுக்கு ஜோடியாக பேயாக நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. இவருடைய அக்கா அஞ்சனா கல்ராணி. இவர் கன்னடத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்திருந்தாலும் தனது தங்கையைப்போன்று பிரபலமாகவில்லை. இந்நிலையில் அக்காவையும் பெரிய கதாநாயகியாக்கிவிடவேண்டும் என்று தனக்கு நெருக்கமான சில இயக்குநர்களிடம் சிபாரிசு செய்து வருகிறார் நிக்கி கல்ராணி. ஆனால், அஞ்சனா கல்ராணிக்குச் சில இயக்குநர்கள் கதாநாயகி வாய்ப்பு கொடுக்க முன்வந்தபோதும், அவர் 6.1 அடி உயரம் இருப்பதால் அவருக்கு ஏற்ற கதாநாயகன் கிடைக்கவில்லை என்று தட்டிக்கழித்து விடுகிறார்களாம். அதனால் இப்போது 6 அடிக்கு மேல் உயரம் கொண்ட நாயகர்களின் படங்களில் அக்கா அஞ்சனாவை நடிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிக்கி கல்ராணி, தான் தமிழ்ப் படங்கள் விசயமாக சென்னை வரும்போதெல்லாம் அக்காவையும் உடன் அழைத்து வந்து சில உயரமான நாயகர்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்து அக்காவுக்கு வாய்ப்புத் தேடி வருகிறாராம் நிக்கி கல்ராணி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!