இரு தலைவர்கள் சந்திப்பு, - சிக்கலான பேச்சுவார்த்தை

வா‌ஷிங்டன்: அமெரிக்கா வந்துள்ள சீன அதிபர் சி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை மிகவும் சிக்கல் மிக்கதாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட சீன அதிகாரிகள் தங்கள் தலைவரை திரு டிரம்ப் சங்கடப்படுத்தக்கூடும் என்பதே தங்களின் முதல் கவலை என்று கூறியுள்ளனர். திரு டிரம்ப்பும், தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மிகவும் சிரமமானதாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியுள்ளார். திரு டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது சீனாவின் வர்த்தகக் கொள்கைகளை கடுமையாகச் சாடினார். அத்துடன் அமெரிக்காவை சீனா சூறையாடி விட்டதாகவும் அவர் அப்போது குற்றம் சாட்டினார். இந்நிலையில் திரு டிரம்ப்பும் திரு சி ஜின்பிங்கும் முதன் முறையாக சந்தித்துப் பேசு கின்றனர்.

அமெரிக்கா வந்துள்ள சீன அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஃபுளோரிடாவில் உள்ள அவரது உல்லாசத் தளத்தில் இரவு விருந்தளித்து உபசரித்தார். அந்த விருந்தில் சீனத் தலைமகள் பெங் லியுவான் (இடமிருந்து 2வது), அமெரிக்கத் தலைமகள் மிலானியா டிரம்ப் (வலது), டிரம்ப்பின் உயர் ஆலோசகர்கள், முக்கிய அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!