சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோ மில் லாரியை மோதவிட்டு தாக் குதல் நடத்தப்பட்ட வேளையில் சம்பவ இடத்தின் அருகே சிங்கப் பூரைச் சேர்ந்த ஐந்து மாணவி யர் இருந்துள்ளனர். நீ ஆன் பலதுறைக் கல்லூரி யில் தாதியர் டிப்ளோமா முடித்த அவர்கள் சம்பவ இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்த அந்த மாணவியரில் ஒரு வரான நூருல்ஜன்னா முகம்மது ரஜிப், 20, இத்தகவலைத் தெரி வித்ததாக அவரின் தந்தையான முகம்மது ரஜிப், 48, 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறி னார். அவர்கள் அனைவரும் அப் பகுதியிலுள்ள கடைகளுக்குச் சென்றபோது சம்பவம் நிகழ்த் தாகவும் உடனடியாக அந்த இடத்தைவிட்டு புறப்பட முயன் றதாகவும் நூருல்ஜன்னா சமூக ஊடகத் தகவலில் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி. கூட்டத்துக்குள் லாரியைப் புகுத்தியதில் நால்வர் மாண்டனர்; 15 பேர் காயமுற்றனர். படம்: ஏஎஃப்பி