சமய நல்லிணக்கத்திற்கு உலகின் பல நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது சிங்கப்பூர். பல சமயங்கள், இனங்களைச் சேர்ந்த மக்கள் சிங்கப்பூரில் வாழ்கிறார்கள். பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என எந்த சமயத்தவராக இருந்தாலும் இந்த நாட்டுக்கே உரிய தனித் தன்மையான நல்லிணக்க அணுகுமுறையை அவர்கள் கைக்கொண்டு வருகிறார்கள்.
சிங்கப்பூரிலுள்ள சமய அமைப்புகளும் சமயத் தலைவர் களும் தங்களது சமய நன்னெறிகளை மக்களுக்குப் போதிக்கும் அதே அளவுக்கு மற்ற சமயங்களைப் பற்றிப் புரிந்துகொண்டு, பல சமயங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.
எனினும், வெளிநாடுகளிலிருந்து சமயப் பொறுப்பு மேற்கொண்டு இங்கு வருபவர்கள் இந்நாட்டின் நியதி புரியாததால் சில நேரங்களில் தங்கள் நாடுகளில் பின் பற்றும் அணுமுறைகளை இங்கும் கடைப்பிடித்து விடு வதுண்டு. இஸ்லாமிய சமய போதகரான இமாம் நல்லா முகம்மது அப்துல் ஜமீல் இந்தியாவிலிருந்து வந்தவர். இங்குள்ள சூழ்நிலை அவருக்குப் புதியது. அதனால் கிறிஸ்துவர்களுக்கும் யூதர்களுக்கும் எதிரான கருத்தை வெளியிட்டார்.