கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

சென்னை: ஆர்.கே.நகர் சட்ட மன்றத் தொகுதி குறித்து கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது. இது குறித்து ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு விதிமுறை கள் அமலில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. மேலும் இம்மாதம் 10ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 12ஆம் தேதி மாலை 5.00 மணி வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும் கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ஆணை யம் தெரிவித்தது. ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு 12ஆம் தேதி அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இதனால் 10.04.2017 அன்று மாலை 5.00 மணி முதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் விதிமுறைகள் செயலில் இருக்கும் என்று அறிக்கை தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!