படிக்க வாய்ப்பு மறுப்பு; ₹20 லட்சம் அபராதம்

மும்பை: மாணவி ஒருவருக்கு மருத்துவம் படிக்க இடமளிக்க மறுத்ததால் 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஃபிர்தோஷ் அன்சாரி (24). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்காக மராட்டியத்தில் உள்ள 2 தனியார் மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரி களில் நடக்கும் முறைகேட்டாலும் மாநில அரசின் அலட்சியத்தாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறாமல் போய்விட்டது என ஃபிர்தோஷ் அன்சாரி மும்பை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை யின்போது, மாணவர் சேர்க்கை யில் முறைகேட்டில் ஈடுபடும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் மாணவிக்கு மருத்துவம் படிப்பதற் கான இடம் கிடைக்கவில்லை என்பது நிரூபணமானது. இதையடுத்து நீதிபதிகள், "உரிய தகுதி இருந்தும் இடம் மறுக்கப்பட்ட ஃபிர்தோஷ் அன்சாரிக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!