மாணவச் செல்வங்களை 700 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலுக்குக் கொண்டு செல்லக் கூடிய ஒரு படைப்பே, '700 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில்' என்ற தலைப்பைக் கொண்ட நாடகம். 'ஏ.கே.டி. கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் இந்தத் தயாரிப்பு ஃபோர்ட் கேன்னிங் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 'வங்கி' எனும் கைகளில் அணியக்கூடிய ஆபரணம் ஒன்றை மையமாகக் கொண்டது. அது எவ்வாறு அந்த இடத்தை அடைந்திருக்கக்கூடும் என்ற கற்பனை, நாடக வடிவில் படைக்கப்பட்டது. இம்மாதம் ஆறாம் தேதி மாணவர்களுக்காகவும் ஏழாம் தேதி பொதுமக்களுக்காகவும் மலாய் மரபுடைமை நிலையத்தில் இந்த நாடகம் அரங்கேறியது. 'சோழ மன்னனின் கால கட்டத்தில் செய்யப்பட்ட இந்த வங்கியை இரவுக்காவல் பணியில் இருந்த வீரர்களின் குழு அங்கே தவறி விட்டுச்சென்றது' எனும் கற்பனைக் கதையைச் சுவையான முறையில் கூற வில்லுப்பாட்டு பயன்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பனைக் கதை மூலம் சிங்கப்பூரில் சோழ ஆட்சி வரலாற்றை எடுத்துக்கூறும் நாடகம் ஒன்றை மலாய் மரபுடைமை நிலையத்தில் படைத்தது ஏ.கே.டி. கிரியேஷன்ஸ்' நிறுவனம். படம்: லெவின்